Last Updated:
வீரர் வீராங்கனைகள் இறுதிவரை போராடி இலக்கை நிறைவு செய்தனர்.
சீனாவில் நடைபெற்ற கடுமையான பெருஞ்சுவர் மாரத்தானில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சவால்களைத் தாண்டி இலக்கை நிறைவு செய்தனர்.
வடக்கு சீனாவின் ஹூவாங்கியாகுவான் பகுதியில் சீனப் பெருஞ்சுவர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நடப்பாண்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றனர். மலைப் பாதைகள், செங்குத்தான சீனப்பெருஞ்சுவரின் படிக்கட்டுகள் மற்றும் இயற்கை நிரம்பிய கிராமப்புறச் சாலைகள் என கடுமையான சவால் நிறைந்ததாக இருந்தது.
Runners tackled over 5,000 ancient stone steps during the Great Wall Marathon in Huangyaguan, China, known as one of the world’s toughest courses pic.twitter.com/ziIwQ575h3
— Reuters (@Reuters) May 16, 2026
42 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றவர்களைப் பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். வீரர், வீராங்கனைகள் இறுதிவரை போராடி இலக்கை நிறைவு செய்தனர்.
May 17, 2026 11:12 AM IST

