Last Updated:
அணையை அமைப்பதன் மூலம் 60 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
அருணாசல பிரதேச எல்லையையொட்டி சீன பகுதியில் அந்நாடு அமைக்கும் அணை தண்ணீர் வெடிகுண்டை போன்றது என்று அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு கவலை தெரிவித்துள்ளார்.
பிரம்மபுத்திரா நதி திபெத் வழியே பாயும்போது யர்லங் சாங்போ ஆறு என்று அழைக்கப்படுகிறது. இதனையொட்டி சீனா உலகிலேயே மிகப்பெரும் அணையை அமைத்து வருகிறது. அருணாசல பிரதேச எல்லை அருகே இந்த திட்டம் அமைவதால் இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பல்வேறு முறை கவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- சர்வதேச நீர் கொள்கைளில் சீனா கையெழுத்திடவில்லை. எனவே அணை கட்டும் விவகாரத்தில் சீனாவை நம்ப முடியாது. அந்த நாடு எது வேண்டுமானாலும் செய்யலாம்.
ராணுவ அச்சுறுத்தலை தவிர்த்து சீனா கட்டும் அணை பாதிப்பை ஏற்படுத்தலாம். அது ஒரு தண்ணீர் வெடிகுண்டு போல் உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த அணையை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. 5 ஆண்டுகளில் அல்லது 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு சீன அரசு வேலை செய்து வருகிறது.
July 09, 2025 5:44 PM IST


