Last Updated:
மோடி The Yomiuri Shimbun பேட்டியில் இந்தியா-ஜப்பான் கூட்டணி, Chandrayaan 5, JAXA, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சீனா, ஹிகேரு இஷிபா குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.
நிலையற்றுப் போயிருக்கும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வர மிகப் பெரிய நாடுகளான சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவது முக்கியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானின் “தி யோமியோரி ஷிம்புன்” நாளிதழுக்கு (The Yomiuri Shimbun) அளித்த பேட்டியில், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை நீண்டகால கண்ணோட்டத்தில் மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளதாக மோடி கூறியுள்ளார்.
இஸ்ரோ மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA ) இணைந்து சந்திரயான் 5 திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். இதனிடையே, ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபா- பிரதமர் மோடி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டணி என்பது இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் தேவையானது என்றார்.
இந்தியாவும் ஜப்பானும் இணைந்து ரோபோடிக்ஸ், செமிகன்டக்டர், கப்பல் கட்டுதல் மற்றும் அணு சக்தி துறைகளில் வெற்றிகரமான ஆட்டோமொபைல் கூட்டாளிகளாக செயல்பட்டு வெற்றிநடை போடுவதாகக் கூறினார்.
கிழக்கு சீன கடல் பிராந்தியத்தில் ஜப்பானுடன் இணைந்து குரல் கொடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீன அதிபரை சந்திக்க உள்ள சூழலில், சீனாவை இவ்வாறு மறைமுகமாக விமர்சித்தும், முன்னதாக காலையில் பாராட்டியும் பிரதமர் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஜப்பான் – இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு பிரகடனமும் கையெழுத்தானது.
August 30, 2025 8:04 AM IST


