Last Updated:
சீன நிறுவனங்களின் ஊடுருவல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான தலையீடுகள் பிரிட்டனின் உள்கட்டமைப்பைப் பாதிக்கலாம் என்பதே டிரம்பின் பிரதான கவலையாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் சீனாவுடன் வணிகத் தொடர்புகளை மேற்கொள்வது அந்த நாட்டுக்கே பெரும் ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளார். இது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல் பிரிட்டன் பிரதமர் என்ற பெருமையுடன் கியெர் ஸ்டார்மர் கடந்த சில நாட்களாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த வருகையின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அவர் மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இதில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டன் – சீனா இடையிலான இந்த நெருக்கம் அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், சீனாவுடனான பொருளாதார ரீதியான நெருக்கம் பிரிட்டனின் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். “இது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது” என்று அவர் நேரடியான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்
சீன நிறுவனங்களின் ஊடுருவல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான தலையீடுகள் பிரிட்டனின் உள்கட்டமைப்பைப் பாதிக்கலாம் என்பதே டிரம்பின் பிரதான கவலையாக உள்ளது.
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள், பிரிட்டன் சீனாவுடன் வைத்துள்ள உறவைப் பொறுத்தே அமையும் என்பதை டிரம்ப் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.


