• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சீனாவுக்கு சவால் விடும் டாடா.. சொந்த மண், சொந்த டெக்னாலஜி.. இனி ஆட்டம் வேற ரகம்! | Tata Challenges China Dominance: Agratas Launches Indigenous LFP Battery Tech with Pilot Production in Gujarat

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சீனாவுக்கு சவால் விடும் டாடா.. சொந்த மண், சொந்த டெக்னாலஜி.. இனி ஆட்டம் வேற ரகம்! | Tata Challenges China Dominance: Agratas Launches Indigenous LFP Battery Tech with Pilot Production in Gujarat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவுக்கு சவால் விடும் டாடா.. சொந்த மண், சொந்த டெக்னாலஜி.. இனி ஆட்டம் வேற ரகம்!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம், இந்திய நிறுவனங்கள் சீனாவை நம்பியிருக்க கூடாது என்பதற்காக பேட்டரி தயாரிப்பில் சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி தற்போது உற்பத்தியை துவங்க உள்ளது.

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முக்கியமான உற்பத்தி பொருளாக இருக்கும் பேட்டரியில் தன்னிச்சையாக இயங்க வேண்டும், யாருடைய உதவியும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

சீனாவுக்கு சவால் விடும் டாடா.. சொந்த மண், சொந்த டெக்னாலஜி.. இனி ஆட்டம் வேற ரகம்!

டாடா குழுமத்தின் கீழ் Agratas Energy Storage Solutions என்ற நிறுவனம் இயங்கி வருவது பலருக்கு தெரியாது. இந்த நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் முதல் எனர்ஜி சேமிப்பு வரையில் பல இடத்தில் பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரியை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் தற்போது முக்கியக்கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் பேட்டரி தொழிற்சாலையில் சோதனை முறையில் LFP பேட்டரியை விரைவில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு பேட்டரி கட்டமைப்பு சீனாவில் இருந்து தான் வருகிறது. சீனாவும் தற்போது பேட்டரி ஏற்றுமதிக்கு பெரும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில் சொந்த மண்ணில், சொந்த டெக்னாலஜி வைத்திருப்பது தான் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.

மறுமுனையில் இந்தியாவிலேயே பேட்டரி தயாரிக்கப்பட்டால் கட்டாயம் எலக்ட்ரிக் கார் முதல் ஸ்மார்ட்போன் வரையில் அனைத்து விதமான பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் Agratas Energy நிறுவனத்தில் இந்தியா- தென் கொரியா, சீன இன்ஜினியர்கள் என பல நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் பேட்டரி உற்பத்தி பணிகளை ஆய்வு செய்து, தொடர்ந்து மெருகேற்றி வருகின்றனர்.

மேலும் சோதனை முயற்சியில் தயாரிக்கப்படும் முதல் பேட்ச் LFP பேட்டரிகளை ஆய்வு செய்து உறுதி அளித்த பின்பு முழுமையான உற்பத்தியை துவங்கும்.

சீனா அரசு முக்கியமான தொழிற்நுட்பத்தை பிற நாடுகளுக்கு பகிர கூடாது என்ற கடுமையான சட்டத்தை கொண்டிருக்கும் வேளையில், ரிலையன்ஸ், JSW போன்ற பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களும் தொழில்நுட்ப கூட்டணிக்காக முயற்சி செய்தும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது டாடா குழுமம் பல வருட ஆராய்ச்சிக்கு பின்பு வெற்றியின் அருகில் வந்துள்ளது.

இதேவேளையில் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து NMC அதாவது nickel manganese cobalt பேட்டரிகளை தயாரிப்பதற்கும் உரிமத்தை பெற்றுள்ளது. இதுவும் Agratas நிறுவனத்திற்கு பெரும் லாபம் பின்நாட்களில் அளிக்க உள்ளது.

Share This Article

English summary

Tata Challenges China Dominance: Agratas Launches Indigenous LFP Battery Tech with Pilot Production in Gujarat

Tata Challenges China Dominance: Agratas Launches Indigenous LFP Battery Tech with Pilot Production in Gujarat — சீனாவுக்கு சவால் விடும் டாடா.. சொந்த மண், சொந்த டெக்.. இனி ஆட்டம் வேற ரகம்!

Story first published: Tuesday, August 4, 2026, 18:06 [IST]

Other articles published on Aug 4, 2026

Read More

Previous Post

கே.எல். ராகுலின் வரலாற்றுச் சாதனை: ரோஹித், கோலியால் கூட உடைக்க முடியாத 10 ஆண்டு ரிக்கார்ட்!

Next Post

`18 வயதில் கல்லூரி பேராசிரியர்’- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! – யார் இவர்? | College Professor at 18: Florida Youth Sets World Record!

Next Post
`18 வயதில் கல்லூரி பேராசிரியர்’- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! – யார் இவர்? | College Professor at 18: Florida Youth Sets World Record!

`18 வயதில் கல்லூரி பேராசிரியர்'- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! - யார் இவர்? | College Professor at 18: Florida Youth Sets World Record!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin