• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சீனாவுக்கு கட்டம்.. மோடியின் ரஷ்ய பயணத்தின் நோக்கம் இதுதான்! அரசியல் விமர்சகர்கள் கருத்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சீனாவுக்கு கட்டம்.. மோடியின் ரஷ்ய பயணத்தின் நோக்கம் இதுதான்! அரசியல் விமர்சகர்கள் கருத்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. சீனாவுக்கு பதில் ரஷ்யாவுக்கு மாற்று பாதைகளை ஏற்படுத்தவே மோடி அங்கு சென்றிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்பங்கேற்றார். அதன் பிறகு 2022, 2023ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி ஜூலை 8,9 தேதிகளில் ரஷ்யாவில் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மோடி நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில். இந்த சந்திப்பு, சீனா பக்கம் ரஷ்யாவை செல்லவிடாமல் தடுப்பதே என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

அதாவது உக்ரைனுடன் ரஷ்யா போரை தொடங்கிய பின்னர் சீனாவுடன் அந்நாடு உறுதியாக கைகோர்க்க தொடங்கியது. இரு நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் நெருக்கமான பேச்சு வார்த்தைகள் நடந்தன. இது போரிலும் எதிரொலித்தது. சீனா-ரஷ்யா கூட்டு சேர்ந்துவிட்டதை உணர்ந்த மேற்கு நாடுகள் உக்ரைனுக்கான ஆயுத உதவியை அதிகரித்தன. ரஷ்யாவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

அதேநேரம் சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை, புதின் நேரடியாக சந்தித்திருந்து சர்வதேச அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்பட்டது. இது இந்தியாவுக்கு லேசான கவலைகளையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது மோடி-புதின் சந்திப்பு குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக

“ரஷ்யாவிற்கு மாற்று வழிகள் இருப்பதை உறுதி செய்ய இந்தியா விரும்புகிறது. சீன நெருக்கம் காரணமாக மேற்கு நாடுகளால் ரஷ்யா தனித்துவிடப்படவில்லை. அதற்கு மாற்று பாதைகள் இருக்கிறது என்பதை இந்த சந்திப்பு சமிஞ்சை செய்திருக்கிறது. தற்போது மேற்கு நாடுகளின் பொருளாதார தடையை ரஷ்யா எதிர்கொண்டிருக்கிறது. எனவே, சமாதானமாக போக வேண்டிய சூழலில் இருக்கிறது.

மறுபும் இந்தியா-ரஷ்யா உறவுகள் நீர்த்துப்போகவில்லை என்பதையும் மோடி, சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதில் ரஷ்யா தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. 2017ம் ஆண்டு முதல் 2022 வரை இந்தியாவுக்கான ஆயுத சப்ளையில் ரஷ்யா பாதியை பூர்த்தி செய்திருக்கிறது. சீனாவுடன் இந்தியாவுக்கு மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சீனாவுக்கு இந்த சந்திப்பு முக்கிய மெசேஜை அனுப்பியுள்ளது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இன்னும் ஒருபடி மேலேபோய், இந்த சந்திப்பு சீனாவை நம்ப வேண்டாம் என்று ரஷ்யாவை எச்சரிப்பதற்காக கூட இருக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு சமீபத்தில் ஆழமடைய தொடங்கியுள்ளது. இதை பயன்படுத்தி இந்தியாவை பகடை காயாக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தலாம் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.



Read More

Previous Post

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு – ரயில் சேவைகள் ரத்து

Next Post

வெளிநாடொன்றில் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நேர்ந்த கதி

Next Post
வெளிநாடொன்றில் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நேர்ந்த கதி

வெளிநாடொன்றில் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நேர்ந்த கதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin