• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சீனாவில் பெண்கள் இப்படி இறங்கிட்டாங்களே.. கை கோர்த்து, கட்டிப்பிடித்து.. 1 மணி நேரத்துக்கு 1 லட்சம் | Chinese Women Are Doing This Now.. Holding Hands, Hugging Men.. ₹1 Lakh for One Hour?

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சீனாவில் பெண்கள் இப்படி இறங்கிட்டாங்களே.. கை கோர்த்து, கட்டிப்பிடித்து.. 1 மணி நேரத்துக்கு 1 லட்சம் | Chinese Women Are Doing This Now.. Holding Hands, Hugging Men.. ₹1 Lakh for One Hour?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Friday, October 2, 2026, 18:27 [IST]

பெய்ஜிங்: காதலிக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுக்க வேண்டும்.. பக்கத்தில் ஒரு ஆண் இருக்க வேண்டும்.. கை கோர்த்து நடக்க வேண்டும்.. கட்டிப்பிடிக்க வேண்டும்.. ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க வேண்டும்.. இதெல்லாம் கேட்க நல்லா இருக்கிறதுதான். ஆனால், அதுக்காக உண்மையிலேயே காதலன் வேண்டுமா என்ன? எங்களுக்கு எந்த காதலனும் வேண்டாம் என்கிறார்கள் சில சீன பெண்கள்.. இதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் வித்தியாசமாகவே உள்ளது..!!

சீனாவில் பெண்களுக்கு காதலிக்க வேண்டும் என்றால், ஆண்களே தேவையில்லையாம்.. பணம் கொடுத்தால் போதும்! தங்களுக்கு பிடித்த ஆண் மாடல்களை புக் செய்து கொள்கிறார்கள்.. அவர்களுடன் காதலர்கள் போல போட்டோவும் வீடியோவும் ஆசை தீர எடுத்து கொள்கிறார்கள்.. இந்த வித்தியாசமான போட்டோஷூட் இப்போது அங்கு சோஷியல் மீடியாவில் புதிய டிரெண்டாக மாறியிருக்கிறது.

China Romantic Photoshoot Viral Trend Paid Companionship

சீனாவில் பெண்களுக்கு காதலிக்க

இதற்காகவே சில கஃபேக்களிலும், பிரத்யேக ஸ்டுடியோக்களிலும் இந்த சேவை நடத்தப்படுகிறது. அங்கே முதலில் ஆண் மாடல்களின் கேட்டலாக் காட்டப்படுகிறது… யாருக்கெல்லாம் எந்த மாதிரியான காதலர்கள் தேவையோ, அந்த கேட்டலாக்கில் தேர்வு செய்து கொள்ளலாம்..

அவர்களுடைய உயரம், தோற்றம், சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலம் உள்ளிட்ட விவரங்கள் அந்த கேட்டலாக்கில் இருக்கும். அதைப் பார்த்து பெண் கஸ்டமர்கள் தங்களுக்குப் பிடித்த மாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம.. எந்த மாதிரி போட்டோ வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம்.

ஃபேஷன் ஸ்டைலில் போட்டோ

காலேஜில் காதலர்கள் சந்திப்பது போல இருக்க வேண்டுமா.. ஃபேஷன் ஸ்டைலில் போட்டோ எடுக்க வேண்டுமா.. அல்லது ரொம்பவே ரொமான்டிக்காக இருக்க வேண்டுமா.. அதற்கேற்ற மாதிரி தீம் வைத்துக் கொள்ளலாம்.

கை கோர்ப்பது, கட்டிப்பிடிப்பது, அன்பாக பார்த்துக் கொள்வது என காதலர்கள் செய்யும் விஷயங்களைப் போலவே மாடல்களும் போஸ் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் போட்டோவாகவும் வீடியோவாகவும் பதிவு செய்து கொடுக்கிறார்கள். அதாவது, போட்டோவை பார்த்தால் நிஜமாகவே காதலர்கள் போலத்தான் இருக்கும்!

ஹைலைட் இதுதான்

இதற்காக அவர்கள் செலவழிக்கும் பணம்தான் இங்கே பெரிய ஹைலைட்.. ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் 8,000 யுவான் வரை கட்டணம் செல்கிறது. நம்முடைய இந்திய மதிப்பில் பார்த்தால் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல். மாடலின் தோற்றம், பிரபலம், நடிப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது.

கடந்த ஜூலை மாதம், Xue Dinge என்ற லைஃப்ஸ்டைல் பிளாக்கர், 2 ஆண் மாடல்களுடன் 30 நிமிட போட்டோஷூட்டுக்காக 4,520 யுவான் செலவு செய்திருக்கிறார். இந்த விஷயம்தான் இந்தப் புதிய டிரெண்ட் மீது இன்னும் அதிக கவனத்தைத் திருப்பியிருக்கிறது.

போட்டோ நோக்கம் இல்லை

ஆனால், இப்படி போட்டோ எடுப்பது ஆசை மட்டுமே இதன் நோக்கமில்லை.. காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருபவர்கள், திருமணம் செய்துகொள்ள சொல்லி குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தத்தால் சோர்ந்து போனவர்கள், தனிமையாக இருப்பவர்கள் எனப் பலரும் இந்த சேவையைத் தேடி வருகிறார்கள்.

கொஞ்ச நேரமாவது ஒருவர் தன்னைப் பார்த்து அன்பாகப் பேச வேண்டும்.. தன்னுடன் இருக்க வேண்டும்.. காதலிப்பது போன்ற ஒரு உணர்வு வேண்டும் என்பதற்காக பணம் செலவு செய்கிறார்கள். இதைத்தான் சீனாவில் வளர்ந்து வரும் “உணர்வுபூர்வமான நுகர்வு” என்பது போல பார்க்கிறார்கள்.

காதல் இல்லாத இடத்தில்.. காதல் மாதிரியான ஒரு உணர்வை உருவாக்கிக்கொள்ள மக்கள் இவ்வளவு பணம் செலவழிக்கத் தொடங்கியிருப்பது, சோஷியல் மீடியாவில் இப்போது பெரிய விவாதமாகி வருகிறது…!!

English summary

Chinese Women Target These Men.. Hugging, Kissing and More for Rs 1 Lakh an Hour?

Read More

Previous Post

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு

Next Post

சுங்கை பீசி இராணுவ முகாமில் பரபரப்பு: துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ‘கெத்தும்’ நீருடன் இராணுவ வீரர் கைது! | Makkal Osai

Next Post
சுங்கை பீசி இராணுவ முகாமில் பரபரப்பு: துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ‘கெத்தும்’ நீருடன் இராணுவ வீரர் கைது! | Makkal Osai

சுங்கை பீசி இராணுவ முகாமில் பரபரப்பு: துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் 'கெத்தும்' நீருடன் இராணுவ வீரர் கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin