Last Updated:
இதில் பங்கேற்ற வீரர்கள் பாறைக் கற்களைத் தூக்கி தங்கள் முதுகில் வைத்து சுமந்தபடி நடந்து சென்றனர்.
சீனாவின் ஸிசாங் மாகாணத்தில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுத் திருவிழாவில், 100 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட பாறைக் கற்களை வீரர்கள் தூக்கி அசத்தினர்.
சீனாவின் ஸிசாங் மாகாணத்தில் 2-ஆவது லாசா பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 140 கிலோ, 125 கிலோ மற்றும் 100 கிலோ ஆகிய 3 எடைகளில் உள்ள பாறைக் கற்களைத் தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீரர்கள் பாறைக் கற்களைத் தூக்கி தங்கள் முதுகில் வைத்து சுமந்தபடி நடந்து சென்றனர்.
இதேபோல், கயிற்றில் கல்லைக் கட்டி எறியும் போட்டியும் நடைபெற்றது. நீளமான கயிற்றில் கல்லைக் கட்டி அதைச் சுழற்றி தூரத்தில் வைத்திருந்த இலக்கின் மீது வீரர்கள் எறிந்தனர்.
குடுஓ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திபெத்திய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், தொலைவில் இருக்கும் மிருகங்களை வேட்டையாடவே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சீனாவில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா.. 100 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட பாறை கற்களை தூக்கி வீரர்கள் அசத்தல்!


