சீனாவின் ஆக்சு மாகாணத்தில் அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. சீனாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள வூஷி கவுண்டியில் பூமிக்கடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வலுவான நிலஅதிர்வுகளும் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் நள்ளிரவில் கடும் குளிரிலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பிற்காக திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்தனர். சேதம் தொடர்பான தரவுகள் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல், கஜகஸ்தானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Residents of the city of Almaty, Kazakhstan take to the streets after the strong 7.1 #earthquake that shook Kyrgyzstan, near the border with China. #earthquake pic.twitter.com/JZ6YegKnGs
— Bhaderwah Live (@BhaderwahLive) January 23, 2024
இதனிடையே, சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. நள்ளிரவில் டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்ததால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் அச்சத்தோடு வெளியேறினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…