Last Updated:
பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இந்த கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சீனாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
சீனாவின் குய்ஜோ மாகாணத்தில் உள்ள தைஜியாங் மாவட்டத்தில் வசிக்கும் மியாவோ இன மக்களின் கலை பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெங்னி ஆற்றங்கரையில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மியாவோ (Miao) இன மக்களின் மிக முக்கியமான சகோதரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழா சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள டாய்ஜியாங் (Taijiang) மற்றும் கைலி (Kaili) பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 10 வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சீன நாட்டுப்புற கலை நிகழ்ச்சி
இந்த நிகழ்வில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியாவோ இன மக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மியாவோ நாட்டுப்புறப் பாடல்களை இசைத்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மியாவோ மக்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இந்த கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மியாவோ பெண்கள் திருவிழாக்களின் போது தலையில் பெரிய வெள்ளி கிரீடங்கள் மற்றும் கனமான வெள்ளி நகைகளை அணிந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதேபோல ஆடைகளில் கதைகளைச் சொல்லும் விதமாக நுணுக்கமான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மற்றும் மெழுகு அச்சிடல் முறையைப் பயன்படுத்துகின்றனர். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடி
May 06, 2026 12:12 PM IST

