இந்த சுரங்கத்தில் 40க்கும் மேற்பட்ட தங்கம் கொண்ட பாறைப் படிவங்கள் உள்ளன. இங்கு எடுக்கப்பட்ட மாதிரிகளில், ஒரு டன் தாதுவுக்கு 138 கிராம் வரை தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது மிகவும் உயர் தரமானதாகக் கருதப்படுகிறது.
ஆனால் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் இருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது பெரும் சவாலாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக பாறை அழுத்தம், நிலத்தடி நீர் கட்டுப்பாடு மற்றும் காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்துவது போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தக் கண்டுபிடிப்பில் இருந்து உற்பத்தியைத் தொடங்க 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு உலகப் பொருளாதாரத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.