சீனாவின் எண்ணெய் ஆலைகள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியில் முடக்கி, அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க வைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் துறைமுகங்களுக்கு அணுகலை கட்டுப்படுத்தும் விதமாக ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை கண்காணித்து வருகிறது.இந்த நிலையில், ஈரான் எண்ணெயை கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சீனாவைச் சேர்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, 40 கப்பல் நிறுவனங்கள் மற்றும் டேங்கர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.




