சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது, பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் பங்கேற்றார்.
அப்போது கடைசி ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் பற்றி ஏளனமாகவும் பேசினார். 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறியும் சிரித்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.
கம்ரான் அக்மலின் பேச்சுக்கு ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதில் சீக்கியர்களின் வரலாறு குறித்து முதலில் கம்ரான் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் , மேலும் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள் மற்றும் சகோதரிகளை இரவு 12 மணி என்றும் பாராமல் சீக்கியர்கள்தான் பாதுகாத்ததாகவும், குறைந்தபட்ச மரியாதையாவது தரவேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து தனது பேச்சு தவறுதான் என்று கூறியுள்ள கம்ரான் அக்மல், சீக்கியர்கள் உணர்வுகளை புண்படுத்தியதால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
