• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சி.வி.சண்முகம் அணியினர் உடன் ஜோசப் விஜய் சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சி.வி.சண்முகம் அணியினர் உடன் ஜோசப் விஜய் சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணியினரை சந்தித்துப் பேசியமை அ.தி.மு.கவில் குழப்பத்தை கூட்டியுள்ளது.


நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.கவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.


சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.


இந்தச் சந்திப்பின் போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இரா.காமராஜ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் விஜய்யும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார்.


நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்ற அ.தி.மு.க. மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக அக்கட்சி எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி என இரு பிரிவுகளாக செயல்படுகிறது. பழனிசாமியை சட்டப்பேரவைக் குழு தலைவராக்க 17 எம்.எல்.ஏக்களும், வேலுமணியை தலைவராக்க 30 எம்.எல்.ஏக்களும் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.


செய்தியாளர்களை நேற்று சந்தித்த சி.வி.சண்முகம், நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அ.தி.மு.க. தலைவணங்கி வரவேற்கிறது.


தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. ஆதரவோடு, தன்னை முதல்வராக தேர்வு செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பழனிசாமி கூறினார். இதற்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.


தேர்தலுக்கு முன்பு இருந்த எந்தக் கூட்டணியிலும் இனி அ.தி.மு.க. இருக்காது. இந்தக் கட்சி காப்பாற்றப்பட வேண்டும். புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்த தீர்மானத்தின்படி, தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினார். இதற்கு பழனிசாமி தலைமையிலான பிரிவு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. (a)




Read More

Previous Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – இனப்படுகொலையை நினைவூட்டும் கஞ்சி!

Next Post

Gold | பிரதமர் பேசிய 2 நாளில்… தங்கம், வெள்ளி நகைகள் மீதான சுங்கவரி – அதிகாலையில் மத்திய அரசு அதிரடி உத்தரவு! | இந்தியா போட்டோகேலரி

Next Post
Gold | பிரதமர் பேசிய 2 நாளில்… தங்கம், வெள்ளி நகைகள் மீதான சுங்கவரி – அதிகாலையில் மத்திய அரசு அதிரடி உத்தரவு! | இந்தியா போட்டோகேலரி

Gold | பிரதமர் பேசிய 2 நாளில்... தங்கம், வெள்ளி நகைகள் மீதான சுங்கவரி - அதிகாலையில் மத்திய அரசு அதிரடி உத்தரவு! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin