• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம்

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது நிருபர்

“பொது வாழ்வில் உள்ளவர் நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சித்ததாக தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரத்தில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா ஆஜாராகி வாதிட உள்ளார். ஆனால், சில தனிப்பட்ட காரணத்துக்காக அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. எனவே, வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதேபோன்று, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி சீனிவாசன், இந்த வழக்கில் மனுதாரர் தரப்புக்காக மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராக உள்ளார்.

அவர், தற்போது வேறு வழக்கில் உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால், மனுதாரர் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இந்த வழக்கில் நீங்களே வாதிடுங்கள், மேலும் இந்த வழக்கில் விசாரிக்க ஒன்றும் இல்லை’ எனத் தெரிவித்தனர். மேலும், “பொது வாழ்வில் இருக்கும் ஒருவர் விமர்சனம் வைக்கும்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மாநில முதல்வரை தரம்தாழ்த்திப் பேசும்போது அவதூறு வழக்கு பதிவு செய்யப்படுவது இயல்புதானே. எனவே, அந்த வழக்கை அவர் சந்திக்கட்டும்’ எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்புக்காக ஆஜரான மூத்த வழக்குரை முகுல் ரோத்தகி, “ஒரு தவறான விஷயத்தை அரசு செய்யும்போது, அதை எதிர்க்கட்சியின் பிரதான தலைவர் என்ற முறையில் விமர்சிப்பது இயல்புதான். ஓர் அரசின் தலைவராக இருப்பவர் முதல்வர்.

எனவே, அரசு எடுக்கும் முடிவுகளுக்காக முதல்வரை விமர்சனம் செய்வது இயல்பான ஒன்று. விமர்சனங்களுக்காக வழக்கு பதிந்தால் தொடர்ந்து அவதூறு வழக்குகள் பதிவு செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, ஒரு முதல்வரை ஒருமையில் பேசுவது மற்றும் மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவது அவதூறுதான். அதனடிப்படையில் வழக்கு பதியப்பட்டது.

Read More

Previous Post

நிலவும் சீரற்ற காலநிலை! நாட்டு மக்களுக்கு வெளியான அவசர தொலைபேசி இலக்கங்கள்

Next Post

ரூ. 639.15 கோடிக்கு 182 வீரர்களை வாங்கிய அணிகள்… 2 நாட்கள் நடந்த ஏலத்தின் ஹைலைட்ஸ்… – News18 தமிழ்

Next Post
ரூ. 639.15 கோடிக்கு 182 வீரர்களை வாங்கிய அணிகள்… 2 நாட்கள் நடந்த ஏலத்தின் ஹைலைட்ஸ்… – News18 தமிழ்

ரூ. 639.15 கோடிக்கு 182 வீரர்களை வாங்கிய அணிகள்… 2 நாட்கள் நடந்த ஏலத்தின் ஹைலைட்ஸ்… – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin