முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் உயிர்மாய்த்து கொண்டமையினால் ஏற்பட்ட உயிரிழப்பா அல்லது கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்தோடு அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே அது
குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பக்கச்சார்பற்ற விசாரணைகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் (மனைவி,
மகன்) மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உட்பட நெருக்கமானவர்களிடம்
வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே
உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் மீட்கப்பட்ட அனைத்து சான்றுப்பொருள்களும்
பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மரணத்துக்கான காரணத்தை இப்போதே தீர்மானிக்க முடியாது.
விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை
கிடைத்த பின்னரே இது கொலையா அல்லது உயிர்மாய்த்து கொண்டமையினால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பதை உறுதியாகக் கூற முடியும்.
இந்த விவகாரத்தில் எவ்வித பக்கச்சார்புமின்றி வெளிப்படையான மற்றும்
பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

