• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிவகாசியில் தொடரும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்: 10,000 பேர் வேலை இழப்பு | Fire cracker industries workers strike continued 10,000 workers jobless at Sivakasi

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சிவகாசியில் தொடரும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்: 10,000 பேர் வேலை இழப்பு | Fire cracker industries workers strike continued 10,000 workers jobless at Sivakasi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Dசிவகாசி: சிவகாசி பகுதியில் 15 நாட்களைக் கடந்தும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று சிறிய மற்றும் பெரிய அளவில் 1,100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு வர்த்தகமும், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

கடந்த மாதம் 9-ம் தேதி சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அமைத்த 5 குழுக்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி வட்டாட்சியர், வருவாய் துறையினர், பெசோ அதிகாரிகள் தனித்தனியாக ஆய்வு நடத்தி 90-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உற்பத்தி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

அதிகாரிகளின் ஆய்வை கண்டித்தும், சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் மே 24-ம் தேதி முதல் சிறு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து 15 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மேலும் அதிகாரிகளின் ஆய்வு மற்றும் மழை காரணமாகவும் பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ரூ.30 கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறிவிப்பு பலகை: இதனிடையே, சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் கடன் கொடுத்தவர்கள் மற்றும் குழுவில் கடன் கொடுத்தவர்கள், ஒரு மாதத்துக்கு கடன் வசூலிக்க வர வேண்டாம் என மீனம்பட்டியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

தோனி நினைத்தால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆகலாம்

Next Post

இ-சிகரெட் விற்பனையில் தீவிர சட்ட அணுகுமுறை தேவை – ஆர்வலர் – Malaysiakini

Next Post
இ-சிகரெட் விற்பனையில் தீவிர சட்ட அணுகுமுறை தேவை – ஆர்வலர் – Malaysiakini

இ-சிகரெட் விற்பனையில் தீவிர சட்ட அணுகுமுறை தேவை – ஆர்வலர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin