சிலிண்டர் விலை: இந்த மாதம் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைக்கப்படலாம்.
கேஸ் சிலிண்டர் : வீடுகளுக்கு இனி எரிவாயு சிலிண்டர் வாங்கும் முறை மாறப்போகிறது. தற்போது உள்ளது போல் அல்லாமல் புதிய முறைப்படி இனி கேஸ் விற்பனை நடைபெறவுள்ளது. அதன்படி, திரவ பெட்ரோல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீட்டுடன் வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இனி இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே சிலிண்டர் வாங்க முடியும். இதன்மூலம் சிலிண்டர் திருட்டை தடுக்க முடியும் என்றும், வீட்டு சிலிண்டர்கள் கடைகளில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் இது உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் புதல்வன் திட்டம் : ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்க் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதில் பயன்பெற தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாக இருக்க வேண்டும். பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம். அதேபோல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்து, ஐடிஐ படிக்கும் மாணவர்களும் பயன்பெறலாம்.
எச்டிஎப்சி பரிவர்த்தனை கட்டணம் : CRED, Cheq, MobiKwik, Freecharge மற்றும் பிற சேவைகளை பயன்படுத்தி, வாடகை செலுத்தினால், எச்டிஎஃப்சி சார்பாக 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு பரிவர்த்தனை 15,000 கீழ் இருந்தாலும், எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை.
இதையும் படிங்க:
+2 முடித்திருந்தால் போதும் ரூ.30,000 சம்பளத்துடன் மத்திய அரசு வேலை!
ஃபாஸ்ட் டேக் விதிமுறை : வாகனங்களிடம் டோல் கட்டணம் வசூலிப்பதற்கு ஃபாஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி புதிய வாகனங்கள் வாங்கி 90 நாள்களுக்குள் ஃபாஸ்டேக் அப்டேட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வாகனங்களின் பதிவு எண், சேஸி எண் ஆகியவை கட்டாயமாக ஃபாஸ்டேக் உடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், மொபைல் எண்ணுடன் ஃபாஸ்டேக் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் : தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இருக்காது. பிறருக்கு மின் கட்டண உயர்வு இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
ரேசன் கார்டு : தமிழ்நாடு முழுவதும் புதிய ரேசன் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த அட்டைகள் வழங்கப்படும். புதிதாக 2 லட்சம் புதிய ரேசன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கவுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
