வங்கி கணக்கு: பந்தன் வங்கி தனது ஸ்டாண்டர்ட் சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் குறைத்துள்ளது. இந்த புதிய விதிகள் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கு முன்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகை 5,000 ரூபாயாக இருந்தது. ஆனால், பிப்ரவரி 1 முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகை 2,000 ரூபாயாகக் குறைக்கப்படும். அதன் பிறகு உங்கள் கணக்கில் இந்த 2,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பு இருந்தால், 0.3 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.


