• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிலிண்டரை தூக்கிச் சென்ற கஸ்டமர்கள்… முன்பதிவு செய்தும் கிடைக்காததால் ஆத்திரம்… கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிய ஏஜென்சி… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சிலிண்டரை தூக்கிச் சென்ற கஸ்டமர்கள்… முன்பதிவு செய்தும் கிடைக்காததால் ஆத்திரம்… கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிய ஏஜென்சி… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 26, 2026 9:06 PM IST

கேஸ் ஏஜென்சி முன்பு வாடிக்கையாளர்கள் சிலர் அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்ல முற்பட்டதால் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா
தெலங்கானா

தெலங்கானாவில் கேஸ் ஏஜென்சி முன்பு அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்ல முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்பதிவு செய்தும் தாமதமானதால் ஆத்திரத்தில் வாடிக்கையாளர்கள் எல்லை மீறியுள்ளனர். நடந்தது என்ன?

சிலிண்டர் முன்பதிவு செய்துவிட்டதால் இன்று வந்துவிடும் அல்லது நாளை வந்துவிடும் என்று காத்திருந்து பொறுமை இழந்த வாடிக்கையாளர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கஸ்டமர் சர்வீசுக்கு கால் செய்தால் எடுப்பதில்லை. முகவருக்கு கால் செய்தால் பதில் இல்லை. இதனால் பொங்கியெழுந்த பொதுமக்களில் சிலர் சிலிண்டரை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர்… சிலிண்டர் விவகாரத்தில் இன்று போய்… நாளை வா… கதைக்கு எப்போது தீர்வு காணப்படும்?

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவு, உலகின் பல நாடுகளில் உள்ள சமையல் அறை வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பெட்ரோல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்கள் பற்றாக்குறையால் தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் தொற்றிய பதற்றம் ஓட்டல்கள், வீடுகளில் உள்ள அடுப்பை பற்ற வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஓட்டல்களிலும் உணவுப் பொருட்களின் விலை எக்குத்தப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள பில் நகரில் வசிக்கும் மக்கள் சிலிண்டர் புக் செய்துள்ளனர். முன்பதிவு செய்து வாரங்கள் கடந்தபோதும், வீட்டிற்கு சிலிண்டர் தேடி வரவில்லை. சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்தாலும் அவர்கள் ஓரிரு நாட்களில் வந்துவிடும் எனக் கூறி சமாளித்துள்ளனர். நேரடியாக சென்று விசாரித்தபோதும், இன்று போய் நாளை வா, கதையாக கூறி தட்டிக் கழித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்பதிவு செய்தும் சிலிண்டர் கிடைக்காத விரக்தியில், வாடிக்கையாளர்கள் சிலர் கேஸ் ஏஜென்சி நிறுவனத்துக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே, அங்கு புக் செய்துவிட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருந்துள்ளனர். அப்போது, லையனுக்கு கொண்டுசெல்வதற்காக சரக்கு வாகனத்தில் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு தயாராக இருந்துள்ளன. அதைக் கண்டதும் சில வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி தங்களுக்கு தேவையான சிலிண்டரை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். அதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த முகவர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.

கேஸ் ஏஜென்சி முன்பு வாடிக்கையாளர்கள் சிலர் அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்ல முற்பட்டதால் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

சிலிண்டரை தூக்கிச் சென்ற கஸ்டமர்கள்… முன்பதிவு செய்தும் கிடைக்காததால் ஆத்திரம்… கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிய ஏஜென்சி…

Read More

Previous Post

ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு…! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

Next Post

2026-லும் தொடரும் அதிர்ச்சி: ஈராக் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் அமெரிக்க கட்டுப்பாட்டிலா… பின்னணி என்ன? | உலகம் போட்டோகேலரி

Next Post
2026-லும் தொடரும் அதிர்ச்சி: ஈராக் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் அமெரிக்க கட்டுப்பாட்டிலா… பின்னணி என்ன? | உலகம் போட்டோகேலரி

2026-லும் தொடரும் அதிர்ச்சி: ஈராக் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் அமெரிக்க கட்டுப்பாட்டிலா... பின்னணி என்ன? | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin