Last Updated:
Anant Kumar Singh | பிகார் மாநிலத்தில் மொகாமா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் களமிறங்கிய பிரபல தாதா அனந்தகுமார் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் வீணா தேவியை 28 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கொலை, ஆள் கடத்தல் என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன், ’பாகுபலி’, ’மோகாமா டான்’ என்ற பட்டப்பெயர்களுடன் வலம் வரும் அனந்தகுமார் சிங் சிறையில் இருந்தபடியே பிகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் மொகாமா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் களமிறங்கிய பிரபல தாதா அனந்தகுமார் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் வீணா தேவியை 28 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தேர்தலுக்கு முன்னதாக ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியூஸியின் உறவினரை கொலை செய்த வழக்கில் அனந்தகுமார் சிங்கை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்த நிலையில், தேர்தலில் அனந்த்குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு பூமிகர் உள்ளிட்ட உயர் சாதியினரின் வாக்குகளை ஒருங்கிணைத்ததே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 1990-களில் லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆட்சிக் காலங்களில் பூமிகர் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது, பூமிகர் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்த அனந்தகுமார் சிங், 2005 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்வானார்.

அதற்கு அடுத்த தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தார். 2022-இல் அனந்தகுமார் சிங் தகுதியிழப்பு செய்யப்பட்டபோது அவரது மனைவி அதே தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், மொகாமா தொகுதி இரண்டு தசாப்தங்களாக அனந்தகுமார் சிங் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
November 14, 2025 5:53 PM IST


