புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், பல்லேகல தும்பறை சிறைச்சாலையில் பெண் மருத்துவர் ஒருவரை அத்துமீறலுக்கு உட்படுத்த முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் சிறைக்குச் சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதியை பரிசோதித்தபோது மருத்துவருக்கு நேரவிருந்த விபரீதம்
கைதியைப் பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவரை, கைதி அத்துமீறலுக்கு உட்படுத்த முயன்றதாகவும், மருத்துவமனை பணியாளர்களும், சிறைக் காவலர்களும் தலையிட்டு அவரைக் காப்பாற்றியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பல்லேகல காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

