
அவர் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
வெலிசர உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர்களான நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையில் நேற்று (22) மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் ‘கெஹெல்பத்தர பத்மே’ லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிசர சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மோதலுக்கான காரணம் மற்றும் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

