எத்தனை தடைகள் வந்தாலும் விடாமுயற்சியோடு உழைத்தால் வெற்றிகள் வந்து சேரும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது தனஞ்சய் தாதரின் வாழ்க்கை கதை. தனது தந்தை நடத்திவந்த மளிகை கடையை விரிவுப்படுத்தி இன்று உலகம் முழுவதும் பரவச் செய்துள்ளார் தனஞ்சய். தற்போது அடில் குழுமத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட், இரண்டு மசாலா தொழிற்சாலைகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 2 மாவுமில்கள்,, ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் எனப் பலவும் செயல்பட்டு வருகின்றன.புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் தனிச்சிறப்பு பெற்றுள்ள இவரது கடைகளில் 9000-க்கும் மேற்பட்ட இந்திய உணவு வகைகள், மசாலா பொருட்கள் மற்றும் ஊறுகாய்கள் கிடைக்கின்றன.
எளிமையான தொடக்கம் : மகராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனஞ்சய் தாதருக்கு தன்னம்பிக்கை, சிக்கனம், கடுமையான உழைப்பு என்றால் என்ன என்பதை அவரது வாழ்க்கை கற்றுக் கொடுத்தது. எத்தனை தடைகள் வந்தாலும் மனதில் உறுதி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை இதிலிருந்தே கற்றறிந்தார் தனஞ்சய்.
20 வயது இளைஞராக 1984-ம் ஆண்டு துபாய்க்கு வந்தார் தனஞ்சய். அங்கு இவரது தந்தை மஹாதியோ தாதர் இந்திய மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்தார். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கான சரியான பொருளை சரியான நேரத்தில் கொடுத்தால் விரைவிலேயே துபாயில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டினரிடம் நற்பெயரை சம்பாதித்தார் தனஞ்சய். வாடிக்கையாளரின் நாடித்துடிப்பை தனது விரல் நுணியில் தனஞ்சய் வைத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
குடும்பத்தொழிலாக இருந்த மளிகை கடையை மாபெரும் சூப்பர் மார்க்கெட்டாக மாற்றியதோடு Peacock என்ற பிரண்டில் இந்திய உணவுப் பொருட்களையும் தயாரித்தார்.
கடந்த நாற்பதாண்டுகளில் வளைகுடா பகுதியில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு சுவையான, சுகாதாரமான, பாதுகாப்பான இந்திய உணவுகளை வழங்கி வருகிறார் தனஞ்சய். இந்த சேவையை பாராட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ஆட்சியாளர்கள் இவருக்கு மசாலா கிங் என்ற பட்டத்தை 2001-ம் ஆண்டு வழங்கினர்.
எங்கள் நிறுவன வளர்ச்சிக்கு என்னுடைய மனைவி வந்தனாவும் மகன்கள் ரிஷிகேஷ் மற்றும் ரோகித் தூணாக இருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் நிதிநிலை ஒழுங்குமுறையோடு இருப்பதற்கும் சிறந்த நிர்வாகத்திற்கும் வந்தனா தான் காரணம். என் இரண்டு மகன்களும் ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நிறுவனத்தில் புகுத்தியுள்ளார்கள் எனப் பெருமிதத்தோடு கூறுகிறார் தனஞ்சய்.
தனது தொழில் திறமைக்காகவும் சேவைக்காகவும் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் தனஞ்சய்.. ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பணக்கார நபர்களின் பட்டியலில் தனஞ்சய். 25-வது இடத்தில் உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் இவருக்கு சிறந்த தொழிலதிபர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இதுதவிர இந்தியாவும் இவருக்கு பாரத் விகாஸ் ரதன் விருது, சிறந்த இந்திய சில்லறை விற்பனையாளர், ராஷ்ட்ரிய உத்யோக் ரத்னா போன்ற விருதுகளை வழங்கியுள்ளது.
Also read |
சுகர் இல்லாத பிஸ்கட் ஐடியா.. ரூ.2000 கோடி மதிப்பு நிறுவனத்துக்கு ஓனரான 60 வயது முதியவர்.. யார் இவர்?
வெறும் தொழிலதிபராக மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல இளம் தொழில்முனைவோர்களின் தரமான பொருட்களை வளைகுடா சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவியாக இருந்துள்ளார். நன்கொடை வழங்குவதில் தாராள குணம் கொண்ட தனஞ்சய், அனாதை ஆசிரமங்களுக்கும், பள்ளிகளுக்கும், வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் நிறைய பண உதவி செய்துள்ளார்.
சொந்தமாக சைக்கிள் கூட வாங்க காசில்லாமல், ஒருவேளை உணவு கிடைத்தால் அதுவே போதும் என்ற நிலையில் இருந்த தனஞ்சய், இன்று தனது கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் தினம் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…