Last Updated:
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பயன்பாட்டில் உள்ள பல திட்டங்களுக்கு PAN கார்டு கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களிடம் PAN கார்டு இல்லாவிட்டால் வங்கியில் அந்த திட்டத்திற்கான அக்கவுண்டை உங்களால் திறக்க முடியாது.
PAN கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. PAN கார்டு இல்லாமல் பல வேலைகள் பாதையிலேயே நின்று போகலாம். தற்போது சிறுவர்கள் கூட PAN கார்டு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு PAN கார்டு எடுத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பயன்பாட்டில் உள்ள பல திட்டங்களுக்கு PAN கார்டு கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களிடம் PAN கார்டு இல்லாவிட்டால் வங்கியில் அந்த திட்டத்திற்கான அக்கவுண்டை உங்களால் திறக்க முடியாது.
இதனால், நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு வங்கியில் குழந்தைக்கு பதிலாக பாதுகாவலராக ஒரு அக்கவுண்ட்டை திறப்பதற்கும் அந்த குழந்தைக்கு PAN கார்டு இருப்பது கட்டாயம். ஒருவேளை இல்லாவிட்டால் மீண்டும் சிக்கல் ஏற்படும். குழந்தைகளுக்கு PAN கார்டு எடுப்பது மிகவும் எளிது. ஆகையால், சிறுவர்களுக்கான PAN கார்டு எப்படி பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் நீங்கள் NSDL வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- பிறகு ‘New Application’ என்பதை கிளிக் செய்து, பின்னர் ‘PAN Type’ என்பதில் ‘New PAN – Indian Citizen (Form 49A)’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பிரிவைப் பொறுத்தவரை ‘Individual’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- இதன் பிறகு நீங்கள் குழந்தையின் தகவல் மற்றும் பெற்றோரின் முகவரி, மொபைல் நம்பர் மற்றும் பெற்றோரின் கையொப்பம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
- பின்னர் ‘Submit’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்ததாக ஸ்கிரீனில் தெரியும் பெற்றோரின் தகவல்களை நிரப்ப வேண்டும்.
- இந்த இடத்தில் நீங்கள் குழந்தையின் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
- பின்னர் இதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு ‘Submit’ என்ற பட்டனை தட்டுங்கள்.
- பேமெண்ட் செலுத்திய பிறகு உங்களுக்கு ஒரு ஒப்புதல் எண் வழங்கப்படும்.
- ஒருவேளை நீங்கள் ஆஃப்லைன் முறையில் ஆவண சரிபார்ப்பு முறையை தேர்வு செய்துள்ளீர்கள் என்றால், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு அனைத்து டாக்குமென்ட்களையும் அனுப்ப வேண்டும்.
- அவ்வாறு செய்யாவிட்டால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
PAN கார்டு என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஒரு வங்கிக்கு சென்று அக்கவுண்ட்டை திறப்பதற்கு முதலில் உங்களுடைய PAN கார்டு நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், PAN கார்டு என்பது வருமான வரி தாக்கல் செய்யும்போது முக்கியமானதாக அமைகிறது. ஆகையால், முன்கூட்டியே PAN கார்டுக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றிருப்பது வீண் பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
July 08, 2025 4:39 PM IST


