தாவாவ் : தாவாவ், ஜாலான் திக்கு (Jalan Tiku) பகுதியில் உள்ள லோரோங் இண்டஸ்ட்ரி மெகா 1-இல், மற்றொரு நபருக்கு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் 18 வயது உள்ளூர் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, 15 வயது சிறுவன் ஒருவன் தனக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து மிரட்டல் குறுஞ்செய்திகள் வருவதாக போலீசில் புகார் அளித்தான்.
அந்தச் சிறுவன் ரங்கு (Ranggu) பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இருந்தபோது, அவனது கைபேசிக்கு இந்த மிரட்டல் செய்திகள் வந்துள்ளன. புகாரைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நேற்று மிரட்டல் விடுத்த 18 வயது இளைஞரைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர் என்று, தாவாவ் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.
மேலும் மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஸ்மார்ட்போன் மற்றும் சிம் கார்டை (SIM Card) போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குற்றவியல் மிரட்டல் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற மற்றும் மிரட்டல் விடுக்கக்கூடிய செய்திகள் குறித்து அச்சப்படாமல் உடனடியாக போலீசில் புகாரளிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
The post சிறுவனுக்கு SMS மூலம் கொலை மிரட்டல் – 18 வயது இளைஞர் அதிரடி கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

