கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், சிறிய ரக லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற இவ்விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி, ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது ரயில் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R

