அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டம் கொடுத்தோம். ரமலான் மாதத்தில் பள்ளிவாசலுக்கு நோன்புக்கஞ்சி தயாரிக்க இலவச அரிசி கொடுத்தோம். நாகூர் தர்கா சந்தன கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம். ஹஜ் மானியம் மத்திய அரசு நிறூத்தியது, மாநில அரசு சார்பில் நாங்கள் கொடுத்தோம். 6 கோடி ரூபாயை 12 கோடி ரூபாயாக உயர்தினோம். ஹஜ் இல்லத்துக்கு 15 கோடி, உலமாக்கள், முகைதினார்களுக்கு ஓய்வூதியம், உலமாக்களுக்கு இருசக்கர மானியம், வக்ப் மானியம், தர்கா மசூதி கட்டிட மானியம், நேரடி நியமின முறையில் நிரப்பப்படாத பணிகளுக்கு முன்கொணர்வு முறை நீடிக்க அரசாணை, கஜா புயல் பாதிப்பில் நாகூர் தர்கா குளக்கரை சீரமைக்க நிதி, டிஎன்பிஎஸ்சி தலைவராக யாஸ்மின் அவர்களை நியமித்தோம், அப்துல் கலாம் அவர்களுக்கு ஆதரவளித்து, வாக்களித்தோம். ஆனால் திமுக அப்துல் கலாமுக்கு வாக்களிக்கவில்லை. எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்தது.

