ஏர்பஸ் விமான ஒப்பந்தத்தில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்,சிறி லங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின்(CIABOC) அதிகாரிகளால் அவர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளித்த நிலையில் கைது
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.

இந்நிலையில் அவரிடம் 7 மணிநேரத்திற்கும் அதிகமாக வாக்குமூலம் பெறப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

