இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 ஈரானிய கடற்படை மாலுமிகள் நேற்று (14) ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ என்ற ஈரானியக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளும், ‘ஐரிஸ் புஷேர்’ என்ற ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்து 204 மாலுமிகளும் அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அனுப்பிவைப்பு
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலுமிகளை ஒரு சிறப்பு ‘துருக்கிய’ விமானத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
