• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

GenevaTimes by GenevaTimes
March 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் சுமார் 1 பில்லியன் ரூபாயை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிறுவனத்தை நாட்டின் தேசிய விமான சேவையாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி நிலையை மேம்படுத்த, முகாமைத்துவத்தினால் மூன்று ஆண்டுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் சுமார் 1 பில்லியன் ரூபாவை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளது.

தேசிய விமான சேவை 

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் நிதிச் சுமையாக இருந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு தீவு நாடாக, நமக்கு சொந்தமான தேசிய விமான சேவை அவசியம் என்பதுதான் எமது கொள்கை.

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு | Srilankan Airlines Govt New Strategic Revival Plan


எதிர்காலத்தில் நிதி மற்றும் செயல்பாட்டு ரீதியான ஒத்துழைப்பை வழங்கக்கூடிய முதலீட்டுப் பங்குதாரர்களை இணைத்துக்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எனினும், விமான சேவையின் தேசிய அடையாளத்தையும், வர்த்தக நாமத்தையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. சில நாடுகளுக்கு நேரடி விமானப் பயணங்களை வழங்கும் ஒரே நிறுவனம் இதுவாகும்.

சர்வதேச முதலீட்டாளர்கள் 

சுற்றுலாத் துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நேரடி இணைப்பு மிகவும் அவசியம்.

உலகளாவிய ரீதியில் விமான நிலையங்களில் எமக்குக் கிடைத்துள்ள ‘லேண்டிங் ஸ்லாட்கள்’ ஒரு மூலோபாயச் சொத்தாகும்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு | Srilankan Airlines Govt New Strategic Revival Plan



இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் தேசிய விமான சேவையின் பலத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

நிறுவனத்தின் செயல்பாடுகள் வலுவடைந்த பின்னரே, சர்வதேச முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சிறந்த பங்குதாரர்களைத் தெரிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.



இந்தத் திட்டம் பலன் தராவிடின், அரசாங்கம் தனது அணுகுமுறையை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் திடீர் பணிநீக்கம்;ஊழியர்கள் அதிர்ச்சி

Next Post

Gold Price Fall | மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Fall | மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Fall | மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin