இந்த மாதிரியான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மட்டுமே வழங்குவார்கள். முதலீட்டாளரின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, மேலும் அதனை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில சமயங்களில் குறித்த காலத்திற்குப் பிறகு FD சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை நீட்டிக்கும்போது அதற்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் பதிவில் கிட்டத்தட்ட ஒரு வருட கால அவகாசம் கொண்ட 3 சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். சிட்டி யூனியன் பேங்க் 365 நாட்கள் FD, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 366 நாட்கள் FD மற்றும் பஞ்சாப் & சிந்து பேங்க் 375 நாட்கள் FD ஆகிய மூன்று திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். மேலும் இந்த 3 ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுமே முதலீட்டாளர்களுக்கு 9,99,999 ரூபாய் முதலீட்டில் அதிகபட்ச மெச்சூரிட்டி தொகையை வழங்குகின்றன.
சிட்டி யூனியன் பேங்க் 365 நாட்கள் FD: பொதுவான சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
ஜெனரல் சிட்டிசன்களுக்கு இந்த வங்கி 7.25 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சிட்டி யூனியன் பேங்க் 365 நாட்கள் FD: சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 366 நாட்கள் FD: பொது சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா இந்த 366 நாட்கள் FD திட்டத்திற்கு ஜெனரல் சிட்டிசன்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 366 நாட்கள் FD: சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த திட்டத்தில் 7.75 சதவீத வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PSB 375 நாட்கள் FD: பொது சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 375 நாட்கள் FD திட்டத்திற்கு 7.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
PSB 375 நாட்கள் FD: சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
சிட்டி யூனியன் பேங்க் 365 நாட்கள் FD: ரூ.9,99,999 முதலீட்டுத் தொகைக்கான மெச்சூரிட்டி
ஜெனரல் சிட்டிசன்களுக்கு: ரூ.10,74,493.94
சீனியர் சிட்டிசன்களுக்கு: ரூ.10,77,134.79
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 366 நாட்கள் FD: ரூ.9,99,999 முதலீட்டுத் தொகைக்கான மெச்சூரிட்டி
ஜெனரல் சிட்டிசன்களுக்கு: ரூ.10,74,705.48
சீனியர் சிட்டிசன்களுக்கு: ரூ.10,80,007.60
PSB 375 நாட்கள் FD: ரூ.9,99,999 முதலீட்டுத் தொகைக்கான மெச்சூரிட்டி
ஜெனரல் சிட்டிசன்களுக்கு: ரூ.10,76,611
சீனியர் சிட்டிசன்களுக்கு: ரூ.10,82,053.64
சிறப்பு FD திட்டங்கள்: சிட்டி யூனியன் பேங்க் vs பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா vs PSB வட்டி விகிதங்கள் ஓர் ஒப்பீடு…!

