இது அதிக கிரெடிட் ஸ்கோர் பெற்றவர்கள் புதிய தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது வீட்டுக் கடன்களை மிகவும் நல்ல வட்டி விகிதங்களில் தடையற்ற முறையில் பெற உதவுகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் நன்மதிப்பை பெற்ற கிரெடிட் ரிப்போர்ட்டை பயன்படுத்தி ஒரு தனிநபர், குறைந்த வட்டியில் கடனை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாடு முழுவதும் பொதுவாக கிரெடிட் ஸ்கோர்கள் 300 முதல் 900 வரை இருக்கும். மேலும் 750-க்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோர் மிகவும் நல்லது முதல் சிறந்தது என்று கருதப்படுகிறது. இந்த கிரெடிட் ஸ்கோர்கள் சிஆர்ஐஎஃப் ஹை மார்க், சிபில், எக்ஸ்பீரியன் மற்றும் ஈக்விஃபாக்ஸ் உள்ளிட்ட முன்னணி கிரெடிட் பீரோக்களால் வழங்கப்படுகின்றன. கடன் வழங்குபவர்கள் பொதுவாக அதிக கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களை குறைந்த அபாயம் உள்ளவர்களாக கருதுகின்றனர். இது பெரும்பாலும் குறைந்த வட்டி விகிதங்கள், எளிதான ஒப்புதல்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளில் சாதகமான பலன்கள் வழங்க முன்னுரிமை அளிக்கிறது.
உதாரணமாக 800 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள் மிகவும் சாதகமான தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் விதிமுறைகளுக்குத் தகுதியுடையவர்களாக இருக்கலாம், மேலும் முன்னணி நிதி நிறுவனங்களிடமிருந்து பிரீமியம் கிரெடிட் கார்டு சலுகைகளையும் பெற முடியும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்து கண்காணிக்கவும்:
– உங்கள் லேட்டஸ்ட் கிரெடிட் ஸ்கோரை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது அதை மீட்டெடுக்க அல்லது அதிகமாக பராமரிக்க எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கை குறித்த யோசனையை உங்களுக்கு வழங்கும்.
– உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கக்கூடிய உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் உள்ள ஏதேனும் தவறுகள் மற்றும் பிழைகளை சரி செய்ய முயற்சிக்கவும்.

– நீங்கள் ஏற்கனவே எடுத்திருக்கும் தனிநபர் கடனின் EMI-க்கள், வீட்டுக் கடனின் EMI-க்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்.
– உங்கள் கடன் பயன்பாட்டை (credit utilisation) குறைவாக வைத்திருங்கள். இது உங்கள் லிமிட்டில் 30%-க்கும் குறைவாக இருப்பது நல்லது.
– குறுகிய காலத்திற்குள் பல கடன் விண்ணப்பங்கள் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்கவும். அப்படி செய்வது உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலை கடுமையாக சோதிக்க வழிவகுக்கும். கடுமையான விசாரணைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை தற்காலிகமாகக் குறைத்து உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலை சேதப்படுத்தும்.
– அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தாலும் உங்களின் வருமானம், கடனை திருப்பி செலுத்தும் காலம், பிணையம் மற்றும் கடன் மதிப்பெண் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, கடன் வழங்குபவர்களை அணுகி, உங்கள் ப்ரொஃபைலுக்கு அவர்கள் அதிகபட்சமாக வழங்க கூடிய சிறந்த வட்டி விகிதத்தைக் கேளுங்கள்.
– பாதுகாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் & மாறுபடும் விகிதங்கள் மற்றும் நிலையான விகிதங்கள் உள்ளிட்ட கடன் தேர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், மேலும் உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுடன் ஒத்துப்போகும் லோன் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
– உங்கள் வலுவான கிரெடிட் ஸ்கோரை தொழில் ரீதியாக பேரம் பேச உதவும் முக்கிய ஒன்றாக பயன்படுத்துங்கள். கடன் வழங்குபவர்கள் பெரும்பாலும் ஹை-குவாலிட்டியாக கருதும் விண்ணப்பதாரர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களில் கடன்களை வழங்குகிறார்கள்.
சுருக்கமாக சொன்னால் குறைந்த வட்டியில் கடனைப் பெறுவது என்பது இனி வெறுமனே விண்ணப்பித்து சிறந்ததை எதிர்பார்ப்பது மட்டுமல்ல. இது உங்களையும், உங்கள் கடன் சான்றுகளையும் நம்பிக்கையுடன் முன்வைப்பது பற்றியது. சுத்தமான கிரெடிட் ரெக்கார்ட் மற்றும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்திய வரலாற்றைப் பராமரிப்பதன் மூலம் உங்களை நம்பகமானவராக முன்னிறுத்துங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், உங்கள் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த வட்டி விகிதங்களில் கடன் பெற முடியும்.
November 21, 2025 12:59 PM IST

