சிங்கப்பூர்: சிராங்கூன் அவென்யூ 2ல் கிட்டத்தட்ட 15 பேர் கொண்ட கும்பல் பொது இடத்தில் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
அக்.27 ஆம் தேதி இரவு நேரத்தில் நடந்த இந்த சண்டை தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.
இந்த மோதலில் சிவப்பு சட்டை அணிந்த ஆடவர் ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டதை காணொளியில் நம்மால் காண முடிந்தது.
பின்னர் பிளாக் 240 சிராங்கூன் அவென்யூ 2 இல் நடந்த சண்டை குறித்து இரவு 11.05 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர் என Stomp தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதலில் 19 மற்றும் 21 வயதுமிக்க இரு இளைஞர்கள் காயமடைந்தனர், ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.
இருவரும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.
காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம்
பொது வெளியில் கடும் மது போதையில் இருந்த 39 வயதுமிக்க நபர் கைது

