சைனாடவுனில் உள்ள ஐயூ டோங் சென் சாலையில் சிமென்ட் லாரி கவிழ்ந்ததில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று ஜூலை 19 அன்று நடந்த விபத்து குறித்து மாலை 5 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.
சாலையில் சிதறிய சிமென்ட்
பெரும் சத்தத்துடன் லாரி கவிழ்ந்து விழுந்ததாக வாசகர் ஒருவர் Mothership தளத்திடம் கூறினார்.

இதன் காரணமாக சாலை மற்றும் பாதசாரிகள் நடைபாதையில் அதிக அளவில் சிமென்ட் கொட்டியிருப்பதையும் காண முடிகிறது.

விபத்தில் காயமுற்ற ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.
Photos Credit: Mothership