• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சின்ன பழம் பெரிய லாபம்… ஸ்ட்ராபெர்ரி பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்…

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சின்ன பழம் பெரிய லாபம்… ஸ்ட்ராபெர்ரி பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேகம் முட்டிச் செல்லும் அழகிய மலைகளுடன் குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரி மாவட்டம் புகழ்பெற்ற கோடை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. புகழ்பெற்ற பல சுற்றுலாத் தலங்களைக் கொண்ட இந்த மாவட்டம் விவசாயத்திற்கும் புகழ்பெற்றது.

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களுக்குப் பல இடங்களிலும் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. நீலகிரியில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவை அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது ஸ்ட்ராபெர்ரி பழங்களும் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

ஒருமுறை பயிரிட்டு சுமார் பத்து மாதங்கள் வரை அறுவடை செய்யும் ஒரு பயிராக ஸ்ட்ராபெர்ரி உள்ளது. ஸ்ட்ராபெர்ரி சாகுபடிக்கு ஸ்ட்ராபெர்ரி நாற்றுக்கள் பூனாவில் இருந்தே பெறப்படுகிறது. நீலகிரியில் ஓரிரு இடங்களில் நாற்றுகள் தயார் செய்யப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: Sirumalai Hill Banana: சிறப்பு வாய்ந்த சிறுமலை வாழை… விலை உயர்ந்தாலும் மகிழ்ச்சியளிக்காதது ஏன்..?

விவசாய நிலங்கள் உழுது தயார் செய்யப்பட்ட பின் ஸ்ட்ராபெர்ரி பயிரிடுவதற்கான வகையில் பாத்தி கட்டப்பட்டு, பிளாஸ்டிக் கவர்களால் சூழப்படுகிறது. அதன் உட்புறமாகச் சிறிய பைப்புகள் மூலம் தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

பின்னர் தயார் செய்த பாத்திகளில் நாற்று நட்டவுடன் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சிப்படுகிறது. மற்ற பயிர்களைப் போலவே எரு உரம், மருந்துகள் தெளிக்கப்பட்டு களை எடுக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.

விளம்பரம்

10 சென்ட் நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி பயிர் செய்வதற்கு முதலீடாகச் சுமார் 12 லட்சம் செலவாகிறது. நன்கு பராமரிக்கப்பட்டு 80 நாட்களுக்குப் பின்னர் அந்த செடிகளிலிருந்து பழங்கள் பழுக்கத் தொடங்குகின்றது. ஒரு ஏக்கர் பயிர் செய்ய வேண்டுமென்றால் குறைந்தது 5 பணியாட்கள் இருந்தே ஆக வேண்டும் என்ற சூழல் ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் நிலவுகிறது.

இதையும் படிங்க: அடடே முட்டைக்கோஸ் இப்படி தான் விளையுதா… நீலகிரியில் சாகுபடி குறையும் காரணம் என்ன..?

பெரும்பாலான ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் மேற்கூரைகள் அமைத்து மழைநீர் இலைகளின் மீது படாத வகையில் பாதுகாக்கப்படுகிறது. 80 நாட்களில் விளைச்சல் துவங்கும் நிலையில் 10 மாதங்கள் வரை பழங்கள் காய்ப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது மக்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிக அளவில் விரும்பி உட்கொள்வதால் சிறந்த விளைச்சல் ஏற்பட்டால் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், “மலை காய்கறிகளுக்கு ஒரு மாற்றமாக இந்த ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டுள்ளோம். ஸ்ட்ராபெர்ரி பயிர் செய்வதற்கு ஆகும் செலவினங்கள் சற்று அதிகமாகவே உள்ளது. அதே சமயத்தில் நல்ல விளைச்சல் இருந்தால் சிறந்த லாபமும் பெறலாம். இந்த சாகுபடியை மேற்கூரை அமைத்துப் பாதுகாத்தால் சிறந்ததாக இருக்கும். தற்போது தான் நாங்கள் இதனைத் துவங்கி உள்ளதால் மேற்கூரை இன்றி பயிர் செய்து வருகிறோம்.

ஸ்ட்ராபெர்ரி நாற்றுக்கான விதைகளை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து, நாற்றுகளை உருவாக்கிப் பயிர் செய்யலாம். சிறிய அளவில் விவசாயம் செய்வதால் அதற்கேற்ப வசதிகள் அமைவதில்லை. தற்போது இந்தச் சாகுபடி இடைநிலையில் உள்ளதால் இதன் லாப நஷ்டங்கள் குறித்துச் சரியாகக் கூற முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி | T20 WC | INDIA won by 7 wickets

Next Post

சாலையில் நடந்த வாக்குவாதம்: ஆடவரை முகத்தில் குத்திய நபர் கைது | Makkal Osai

Next Post
சாலையில் நடந்த வாக்குவாதம்: ஆடவரை முகத்தில் குத்திய நபர் கைது | Makkal Osai

சாலையில் நடந்த வாக்குவாதம்: ஆடவரை முகத்தில் குத்திய நபர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin