• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘சிந்து நதி நீரை நிறுத்தினால்…’ – பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கு மிரட்டல் | If Indus River water is stopped – Pakistan Army Spokesperson Threatens India

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
‘சிந்து நதி நீரை நிறுத்தினால்…’ – பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கு மிரட்டல் | If Indus River water is stopped – Pakistan Army Spokesperson Threatens India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயன்படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அகமது ஷெரீப் சவுத்ரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய ஷெரீப் சவுத்ரி, “எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், இதே வார்த்தையை பயன்படுத்தி சமீபத்தில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ஹபீஸ் சயீத் சமூக ஊடகங்களில் பேசிய வீடியோ வைரலானது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏப்ரல் 23 அன்று சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுகுறித்து, “ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது; பேச்சும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்று இந்தியா தெரிவித்தது.

சிந்து நதிநீர் ஒப்பந்​தத்தின் கதை: 1947இல் இந்தியாவும் பாகிஸ்​தானும் விடுதலை அடைந்து தனி நாடுகள் ஆயின. புதிய நாடுகளுக்கு இடையே வரையப்பட்ட எல்லைக்கோடு சிந்து நதியை ஊடறுத்தது. இந்த நதி திபெத்தில் உற்பத்​தியாகி இந்தியாவில் 780கி.மீ. தொலைவும் பாகிஸ்​தானில் 2,170 கி.மீ. தொலைவும் ஓடி, அரபிக் கடலில் கலக்கிறது. இது தவிர, சிந்து நதியில் ஐந்து கிளை நதிகள் சங்கமிக்​கின்றன.

ஆக, ஆறு நதிகள். இவற்றின் நீரை எவ்விதம் பங்கிட்டுக்​கொள்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டாயின. நீண்ட விவாதங்​களுக்குப் பிறகு, உலக வங்கியின் மத்தி​யஸ்​தத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் 1960-ல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். மேற்குறிப்​பிட்ட ஆறு நதிகளில் மூன்று நதிகள் (ராவி, பியாஸ், சட்லஜ்) ‘கிழக்கு நதிகள்’ என்றும், அடுத்த மூன்று நதிகள் ‘மேற்கு நதிகள்’ (சிந்து, ஜீலம், செனாப்) என்றும் அழைக்​கப்​படு​கின்றன.

ஒப்பந்​தத்​தின்படி கிழக்கு நதிகளின் நீரை இந்தியா முழுமை​யாகப் பயன்படுத்திக் கொள்​ளலாம். மேற்கு நதிகளின் நீர் பாகிஸ்​தானுக்கு உரியது. இந்தப் பங்கீட்​டின்படி மொத்த நீரில் 20% இந்தியா​வுக்கும் 80% பாகிஸ்தானுக்கும் கிடைக்​கும்.

இந்தியாவும் பாகிஸ்​தானும் மூன்று முறை போரிட்​டிருக்​கின்றன (1965, 1971, 1999). பாகிஸ்தான் பல முறை எல்லை தாண்டிய பயங்கர​வாதத்தை நடத்தி​யிருக்​கிறது. சமீப காலங்​களில் மேற்கு நதிகளின் குறுக்கே கிருஷ்ணகங்கா அணை, ரேட்டல் புனல் மின் நிலையம் முதலானவற்றை இந்தியா நிர்மாணித்த​போது, பாகிஸ்தான் இயன்றவரை முட்டுக்​கட்டை போட்டது. 2023 முதல் இந்த ஒப்பந்​தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்​திவந்தது; பாகிஸ்தான் உடன்பட​வில்லை.

ஆனால், அப்போதெல்லாம் இந்த ஒப்பந்​தத்தை இந்தியா முறிக்க​வில்லை. இப்போது முதற்​கட்டமாக ஒப்பந்தத்தை இடைநிறுத்​தி​யிருக்​கிறது. சிந்து நதியால் பாகிஸ்​தானில் பயனுறும் பாசனப் பரப்பு 160 லட்சம் ஹெக்டேர் ஆகும். இதிலிருந்து பெறப்​படும் விளைபொருள்கள் பாகிஸ்​தானின் உள்நாட்டு உற்பத்​தியில் கால் பங்கு ஆகும். கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல நகரங்​களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் சிந்து நதி விளங்கு​கிறது.



Read More

Previous Post

ஐபிஎல் 2025: தொப்பிகளுக்கான போட்டி.. முன்னிலையில் யார்? முன்னேற்றமும் சறுக்கலும்.. முழு அப்டேட்!

Next Post

சபா விவகாரத்தில்  அசாம் ‘நிபுணர்’, மற்ற இடங்களில் தொழில்முறை அல்லாதவர் – வழக்கறிஞர் – Malaysiakini

Next Post
சபா விவகாரத்தில்  அசாம் ‘நிபுணர்’, மற்ற இடங்களில் தொழில்முறை அல்லாதவர் – வழக்கறிஞர் – Malaysiakini

சபா விவகாரத்தில்  அசாம் ‘நிபுணர்’, மற்ற இடங்களில் தொழில்முறை அல்லாதவர் – வழக்கறிஞர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin