• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது ‘போர் நடவடிக்கை’யே: பாகிஸ்தான் | Any attempt by India to stop Indus water will be seen as ‘act of war’ says Pakistan on Pahalgam attack

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது ‘போர் நடவடிக்கை’யே: பாகிஸ்தான் | Any attempt by India to stop Indus water will be seen as ‘act of war’ says Pakistan on Pahalgam attack
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஈடுபட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்பது உட்பட 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் இன்று ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் அறிவிப்பை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது. இந்த ஒப்பந்தம் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். மேலும், ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைப்பதற்கான எந்த ஏற்பாடும் இதில் இல்லை. சிந்து நதிநீர் பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தானின் 24 கோடி மக்களுக்கு அது உயிர்நாடி.

சிந்து நதிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த எத்தகைய விலையையும் பாகிஸ்தான் கொடுக்கும். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரின் ஓட்டத்தைத் தடுப்பது அல்லது திசைதிருப்புவது, ஆற்றின் கீழ் பகுதியின் உரிமைகளை அபகரிப்பதாகும். இது ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும். சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பதிலளிக்கும்.

இந்தியா மீதான பதில் நடவடிக்கைகள்: சர்வதேச மரபுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றை மதிக்காத பொறுப்பற்ற ஒரு நாடு இந்தியா. அது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது, படுகொலைகளை நிகழ்த்துகிறது, காஷ்மீர் மீதான சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை பின்பற்ற மறுக்கிறது. இத்தகைய வெளிப்படையான நடத்தையை இந்தியா கைவிடும் வரை, சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும்.

வாகா எல்லைச் சாவடியை பாகிஸ்தான் உடனடியாக மூடும். இந்தப் பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தப்படும். அரசின் ஒப்புதலுடன் கடந்து சென்றவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அந்த வழியாக திரும்பலாம். அதன்பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. சீக்கிய மத யாத்ரீகர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. SVES-இன் கீழ் பாகிஸ்தானில் தற்போது உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப் படைகளின் ஆலோசகர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் ஏப்ரல் 30-க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆலோசகர்களுக்கு உதவும் பணியில் உள்ள ஊழியர்களும் இந்தியாவுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏப்ரல் 30 முதல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும். இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்படுகிறது.

எந்தவொரு தவறான சாகசத்துக்கு எதிராக செயல்பட, இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நாட்டின் ஆயுதப்படைகள் முழுமையாகவும் தயாராக உள்ளன என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 5 அதிரடி நடவடிக்கைகள்: முன்னதாக, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் நேற்று (ஏப்.23) அறிவித்தது. அதன் விவரம்:

1. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.

2. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.

3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.



Read More

Previous Post

‘ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லரை தக்க வைத்திருக்க வேண்டும்’: அனில் கும்ப்ளே கருத்து

Next Post

பவானிக்கான வாக்குகள், சமூகத்தின் ஆதங்கமாக அமையும்

Next Post
பவானிக்கான வாக்குகள், சமூகத்தின் ஆதங்கமாக அமையும்

பவானிக்கான வாக்குகள், சமூகத்தின் ஆதங்கமாக அமையும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin