சிங்கப்பூர் TOTO லாட்டரியின் முதல் பரிசாக S$12 மில்லியன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது, இது வரும் பிப்ரவரி 23 அன்று குலுக்கப்படும்.
இதில் சிங்கப்பூரில் வசிக்கும் பொதுமக்கள், வெளிநாட்டவர்கள் என அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது.
அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்பதால், வசூல் அடிப்படையில் இதன் முதல் பரிசுத் தொகை S$12 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் மக்களால் இந்த TOTO டிக்கெட்டை வாங்க முடியாது. சிங்கப்பூரில் வசிப்பவர்கள் மட்டுமே இதை வாங்க முடியும்.
அவ்வாறு இருக்கையில், வெளிநாட்டில் வசிக்கும் சாமானிய மக்களும் இந்த அதிஷ்ட டிக்கெட்டை வாங்கி வெற்றிக் கனியை பறித்து தன் குடும்பத்தை முன்னேற்றி விடலாம் என நினைப்பதுண்டு.
இதனை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூரில் உள்ள Easwaran Speaks என்ற Youtuber வெளிநாட்டில் உள்ள 120 பேருக்கு டிக்கெட் எடுத்துக்கொடுப்பதாக கூறியுள்ளார்.
கடந்த முறை புத்தாண்டு குலுக்கலில் அவ்வாறு அறிவித்து 100 வெளிநாட்டவர்களுக்கு டிக்கெட்டுகளையும் வாங்கினார்.
ஆனால், அதில் யாரும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இந்த பிரம்மாண்ட குலுக்களிலும் அந்த வாய்ப்பை அவர் வழங்குகிறார்.
அவரே பணத்தை போட்டு இந்த டிக்கெட்டை பெற்று தருவார். வெற்றிபெற்றால் சதவீத அடிப்படையில் பரிசுத் தொகையை வழங்குவதாக கூறியுள்ளார்.
வீடியோ வெளியானதை அடுத்து அனைவரும் அவருக்கு மெயில் அனுப்பி குவித்தனர். இதனால் அவர் நிர்ணயித்த 120 என்ற நபர்களை தாண்டி மெயில் வந்ததாக அவர் இன்னொரு வீடியோவில் குறிப்பிட்டார்.
மேலும் இன்னொரு குலுக்கல் நடைபெற்றால் தாம் மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதாகவும் கூறினார்.
youtubers, websites போன்றவை இதுபோன்ற வாய்ப்புகளை அடிக்கடி வழங்குவர். இதில் மோசடி ஏதும் இருக்காது. ஏனெனில் ஒரு ருபாய் கூட நம்மிடம் கேட்க மாட்டார்கள்.
இவ்வாறான வாய்ப்புகள், வேலை சம்மந்தமான பதிவுகளை மட்டும் தெரிந்துகொள்ள Tamil daily Singapore டெலிக்ராம் பக்கத்தில் இணைந்து இருங்கள்: https://t.me/tamildailysg