சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), 2026 ஆம் ஆண்டுக்கான “குதிரை” நாணயத்தை வெளியிடுகிறது.
4வது சீன பஞ்சாங்க நாணய வரிசையின் பத்தாவது பதிப்பான இந்த புதிய நாணயங்களை MAS வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சாலைகளில் உறங்கும் ஊழியர்கள்: “என்ன ஒரு மோசமான பிம்பம்” என வலுக்கும் எதிர்ப்புகள்
நாணயத்தில் பின்புறம் “பொங்கோல் வாட்டர்வே பூங்கா” (Punggol Waterway Park) மற்றும் குதிரை படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு நாணயத்தின் முன்புறத்திலும், 2026 ஆம் ஆண்டை குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த புதிய நாணயங்களுக்கான முன்பதிவு நேற்று (நவ.18) செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. அடுத்த மாதம் டிச.14 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அவற்றை ஜனவரி 1, 2026 முதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று MAS செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
அதாவது, 10 பதிப்புகளில் இந்த நாணயங்கள் கிடைக்கும், அவை வெவ்வேறு வடிவம், உலோக கலவைகள் கொண்டு உருவாக்கப்பட்டவை.
“வாழ வேண்டிய வயசுங்க..” – சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டை இளைஞர் மின்னல் தாக்கி மரணம்
சிங்கப்பூரில் பங்களாதேஷ் கட்டுமான ஊழியர் மரணம் – “அன்பாக பழகக்கூடியவர்” – கண்ணீரில் சக ஊழியர்கள்

