சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் பெரும்பாலான நாள்களில் மழையை எதிர்பார்க்கலாம், எனவே வெளியே செல்லும்போது குடையை எடுத்துச் செல்வது நல்லது.
ஆகஸ்ட் முற்பகுதியில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வகம் (MSS) கணித்துள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய செயல்முறை: பயணத் தடையும் விதிக்கப்படலாம்!
சிங்கப்பூர் வானிலை நிலவரம்
பெரும்பாலான நாட்களில் காலை பின்னேரத்திலும் மற்றும் பிற்பகல் வேளைகளிலும் தீவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் தென்மேற்கு பருவமழை நிலவும் என்றும், இதனால் தென்கிழக்கு அல்லது தென்மேற்கிலிருந்து காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் முற்பகுதியில் மொத்த மழைப்பொழிவு என்பது தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று MSS தெரிவித்துள்ளது.
மேலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை என்பது பெரும்பாலான நாட்களில் 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
ஆகஸ்ட் மாத கணிப்புகளுடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தின் இரண்டாம் பாதியில் பெரும்பாலான நாட்களில் சீரான மற்றும் மிதமான வெப்பநிலை காணப்பட்டது.
தினசரி அதிகபட்ச வெப்பநிலை, பெரும்பாலான நாட்களில் 33 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் சோதனை: தகாத சேவை.. சந்தேக நபர்கள் 28 பேர் கைது
PHOTO: @Namelessguyyy/Reddit