Singapore rules and fines: சிங்கப்பூரின் சட்டத்திட்டங்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று கடுமையாக இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.
இவ்வாறு இருக்கையில், சிங்கப்பூருக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில விதிமீறல்களில் ஈடுபட்டு தண்டனை பெறுவது அவ்வப்போது நடக்கும்.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து… இந்திய ஓட்டுநர் உயிரிழப்பு?
அந்த வரிசையில் தற்போது ஹோட்டல் அறையில் துரியன் பழம் வைத்திருந்ததற்காக சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிக்கு S$200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் சுற்றுலா பயணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில், துரியன் பற்றிய சட்ட விதிகள் குறித்து முன்பே தமக்கு தெரியாது என்று அந்தப் பெண் தெளிவுபடுத்தினார்.
மேலும் மற்ற சுற்றுலாப் பயணிகள் அதே தவறைச் செய்து அபராதம் பெறக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
தன் நண்பருடன் வெளியில் சென்ற அந்த சுற்றுலா பயணி சாலையோர கடைகளில் துரியன் பழங்கள் விற்பதை கண்டுள்ளார், பின்னர் அதை வாங்கிய அவரால் அங்கு அமர்ந்து சாப்பிட முடியவில்லை. ஆகையால் பழத்தை ஹோட்டல் அறைக்கு கொண்டு வந்துள்ளார்.
பின்னர் இருவரும் தங்கள் அறையில் வைத்து பழத்தை சாப்பிட்டுள்ளனர். மறுநாள் அந்த ஹோட்டலில் இருந்து ஒரு கடிதம் வந்ததை கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.
அந்தக் கடிதத்தில், அறையில் துரியன் வாசனை கண்டறியப்பட்டதாகவும் சுத்தம் செய்வதற்கான S$200 கட்டணம் விதிக்கப்படும் என்றும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது.

பின்னர் ஹோட்டல் வருகை அறைக்கு சென்ற அந்தப் பெண், இந்த விதி பற்றி தனக்குத் தெரியாது என்று அங்குள்ள ஊழியரிடம் கூறி, தள்ளுபடி அளிக்குமாறும் கேட்டார். ஆனால், அது முடியாது என்று ஊழியர் மறுத்துள்ளார்.
இதனை அடுத்து, துரியன் பற்றி வேறு ஏதாவது சட்ட விதிகள் உள்ளதா என்று இணையத்தில் தேட ஆரம்பித்தார் அந்த பயணி.
அதில், பொதுப் போக்குவரத்துகளில் துரியன் பழங்களை கொண்டு செல்வதற்கு S$500 அபராதம் விதிக்கப்படும் என்ற விதியை சுட்டிக்காட்டிய அந்தப் பெண், அன்று நாங்கள் ரயிலில் பழங்களை எடுத்துச் செல்லவிருந்தோம் ஆனால் சோர்வாக இருந்ததால் அதிஷ்டவசமாக அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களை பதாகைகளுடன் போராட தூண்டி சிக்கிய இருவர்

