• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூர் வந்த விமானத்தில் பணிப்பெண்ணை கழிவறையில் தள்ளி சீண்டல்… சிக்கிய இந்திய நாட்டவர்

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூர் வந்த விமானத்தில் பணிப்பெண்ணை கழிவறையில் தள்ளி சீண்டல்… சிக்கிய இந்திய நாட்டவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, 28 வயதுமிக்க விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் அவர் ஈடுப்பட்டதாவும், இந்நிலையில் அவர் மீது இன்று (ஏப்ரல் 22) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒர்க் பெர்மிட் (Work permit) வேலைவாய்ப்புகள்: Class 4 – 5 ஓட்டுநர்கள், சமையல்காரர்கள் NTS பட்டியலில் சேர்ப்பு

என்ன நடந்தது?

விமான பணிப்பெண், பெண் பயணி ஒருவரை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார், ​​அப்போது கழிப்பறையின் தரையில் ஒரு டிஷ்யூ பேப்பர் கிடந்துள்ளது. அதை எடுக்க பணிப்பெண் குனிந்தபோது, ஆடவர் பணிப்பெண்ணின் பின்னால் வந்து பிடித்து, தன்னோடு சேர்த்து கழிவறைக்குள் தள்ளியதாக முதற்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டுள்ளது.

அப்போது உடன் இருந்து பார்த்த பெண் பயணி, பணிப்பெண்ணை உடனடியாக கழிப்பறையிலிருந்து வெளியே கொண்டுவர உதவினார். பின்னர் இந்த சம்பவம் விமானக் குழு மேற்பார்வையாளருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், விமானம் சாங்கி விமான நிலையத்தை வந்து அடைந்ததும் விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகள் அந்த ஆடவரை கைது செய்தனர்.

இந்தக் குற்றத்திற்கு ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது ஏதேனும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.

ஒர்க் பெர்மிட் அனுமதியில் சிறப்பான மாற்றம் – ஜூலை முதல் அமல்; வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சி

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2வது வழக்கு

இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக விமான மானபங்க செய்தியை காவல்துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இன்னொறு இந்திய நாட்டவரான பாலசுப்ரமணியன் ரமேஷ் என்ற 73 வயது ஆடவருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவரும் விமான பணிப்பெண்ணிடம் மானபங்க செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

Feature Image: Changi Airport/Facebook

Read More

Previous Post

ரவூபில் மார்வெல் காமிக்ஸ் உலோகங்கள்பற்றிய பதிவை MCMC விசாரிக்கிறது – Malaysiakini

Next Post

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில்…!

Next Post
சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில்…!

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin