சிங்கப்பூர் வந்து செல்லும் இரண்டு விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஸ்கூட் (Scoot) நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து முழுவதும் கடும் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செயல்பாட்டுக் காரணமாக நாளை (நவம்பர் 28) செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளது.
கடைவீட்டில் மோதிய லாரி… இருவர் மருத்துவமனையில் சிகிச்சை
பாதிக்கப்பட்ட விமானங்கள்
சிங்கப்பூரில் இருந்து ஹட் யாய் (Hat Yai) நகருக்கு மதியம் 12.05 மணிக்கு புறப்படவிருந்த TR632 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போல, ஹட் யாய் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு மாலை 4.20 மணிக்கு வரும் TR633 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்கூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்பப் பெறவும், மறு முன்பதிவு செய்யவும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade
The post சிங்கப்பூர் வந்து செல்லும் 2 விமானங்கள் ரத்து – ஸ்கூட் (Scoot) அறிவிப்பு appeared first on Tamil Daily Singapore.

