சிங்கப்பூர்-மலேசிய காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 11 அன்று நடந்த இந்த சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத குதிரை பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் 41 பேர் இது தொடர்பான விசாரணையில் உள்ளனர்.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆடவர்… யார் அவர்?
இதில் கைது செய்யப்பட்ட நபர்கள் 50 முதல் 78 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், மேலும் அவர்களுக்கு சட்டவிரோத குதிரை பந்தய நடவடிக்கைகளை மேற்கொண்ட கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகளை SPF இன் குற்றவியல் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் சிறப்பு நடவடிக்கை அதிகாரிகள் நடத்தினர், இதில் 14 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.
இதில் ரொக்கம், சுமார் $200,000 மதிப்புள்ள மூன்று வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் மற்றும் சூதாட்டம் தொடர்பான பொருட்கள் போன்ற மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் மலேசிய காவல்துறையின் (RMP) CID அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 53 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று ஜூன் 13 அன்று, சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Photo: SPF

