சிங்கப்பூர்: பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அவர் புது தில்லிக்கு பயணம் செல்கிறார்.
ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் என்னென்ன மாற்றங்கள் / நடவடிக்கைகள்?
நாளை மறுநாள் (செப்.4) வரை அவர் இந்தியாவில் தங்கி இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் நிதியமைச்சராகவும் இருக்கும் பிரதமர் வோங், திரு. மோடி மற்றும் இந்திய அதிபர் திரௌபதி முர்முவையும் சந்திப்பார், மேலும் அவர்களுடன் விருந்து உபசரிப்பிலும் கலந்துகொள்வார்.
இரு நாட்டு உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையும், சிங்கப்பூரின் 60வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும் இந்தியத் தலைநகரில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் வோங் சிங்கப்பூரர்களைச் சந்தித்து உரையாடுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: செப்.1 முதல் வரும் மாற்றங்கள் என்ன?
Photo: MDDI
The post சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவுக்கு பயணம் appeared first on Tamil Daily Singapore.

