சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா இந்து பக்தர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழா ஆகும்.
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நேற்று (அக்.12) நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
கட்டுமான தளத்தில் கிரேன் கவிழ்ந்து உடைந்து விபத்து: 37 வயது ஊழியருக்கு அறுவை சிகிச்சை
மாலை 6 மணிக்கு தொடங்கிய இவ்விழாவை காண மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக அமைச்சர் டேவிட் நியோ கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள், சடங்குகள் என களைகட்டியது.
சுமார் 4000 பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையினரும் இந்த விழாவில் கலந்துகொண்டு கலாச்சார சிறப்புகளை பற்றி அறிந்துகொண்டனர்.

சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில், சிங்கப்பூரின் மிக பழைமையான கோவில்களில் ஒன்று.
TOP PHOTO: Amrin Amin/FB