சிங்கப்பூர் டோட்டோவில் (TOTO) ஜாக்பாட் முதல் பரிசு மீண்டும் S$10 மில்லியன் என்ற பிரம்மாண்டத்தை தாண்டும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் ஜூலை 31, வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு இந்த ஜாக்பாட் குலுக்கல் நடைபெறும் எனவும் அது கூறியுள்ளது.
சிங்கப்பூர் டோட்டோ: லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட்டுக்கு S$1.18 மில்லியன் பரிசு!
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) ஜாக்பாட்
ஜூலை 21, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கடைசி மூன்று குலுக்களிலும் “குரூப் 1” முதல் பரிசை யாரும் வெற்றிபெறவில்லை, இதனால் பரிசுத் தொகை அதிகரித்துள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய தகவல், இதே போன்ற ஜாக்பாட் குலுக்கல் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது.
அதில் குரூப் 1 வெற்றியாளர் யாரும் இல்லை, இதன் காரணமாக முதல் பரிசான S$12.76 மில்லியன் குரூப் 2 வெற்றியாளர்கள் 12 பேருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா?
டோட்டோ இந்த ஆண்டில் 8வது முறையாக S$10 மில்லியனை தாண்டியது
ஜூலை 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குலுக்கல் “கேஸ்கேட் டிரா” என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில், தொடர்ச்சியான மூன்று குலுக்களிலும் குரூப் 1 வெற்றியாளர்கள் யாரும் இல்லாமல் இருந்தால் அதற்கு பிறகு நடைபெறும் குலுக்கள் அவ்வாறு அழைக்கப்படும்.
2025ல் மட்டும் டோட்டோ ஜாக்பாட் முதல் பரிசு S$10 மில்லியன் என்ற உச்சத்தை எட்டுவது இது எட்டாவது முறையாகும்.
இதற்கு முன்னர் நடந்த கேஸ்கேட் டிராக்கள்: ஜனவரி 3, ஜனவரி 24, பிப்ரவரி 7, மார்ச் 6, ஏப்ரல் 28, ஜூன் 19 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளில் நடந்தன.