TOTO Draw Result: சிங்கப்பூர் டோட்டோ லாட்டரியில் S$12.9 மில்லியன் என்ற பிரம்மாண்ட முதல் பரிசை இருவர் வென்றதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெற்ற அந்த டோட்டோ கேஸ்கேட் டிராவில் வெற்றிபெற்ற இரண்டு வெற்றியாளர்களுக்கும் முதல் பரிசான சுமார் S$12.9 மில்லியன் தொகை தோராயமாக S$6.46 மில்லியன் என பிரித்துக் கொடுக்கப்படும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனம் கூறியுள்ளது.
முதல் பரிசை வென்ற இரண்டு டிக்கெட்டுகளும் “System 7 entry” முறையில் இணையத்தில் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற எண்கள் 3, 8, 12, 18, 24, 41, கூடுதல் எண் 11 ஆகும்.
அதேபோல. இரண்டாம் பரிசை 12 பேர் வென்றதாகவும், ஒவ்வொரு வெற்றியாளருக்கும் சுமார் S$124,689 பிரித்து கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் பரிசு வெற்றி பெற்ற டிக்கெட்டுகளில் ஒன்று iTOTO சிஸ்டம் 12 முறையில் வாங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 17, ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் நடந்த கடைசி மூன்று குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்பதால் அதன் பரிசுத் தொகை தற்போது S$12.9 மில்லியனாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

