சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிராவின் ஜாக்பாட் பரிசுத் தொகை சுமார் S$10 மில்லியன் என்ற பிரம்மாண்டத்தை எட்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மூன்று டிராக்களிலும் முதல் பரிசை (குரூப் 1) யாரும் வெல்லவில்லை, இதன் காரணமாக அதிகபட்ச பரிசுத் தொகை பிரம்மாண்ட எட்டு இலக்கத் தொகையாக தற்போது அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு
இந்த குலுக்கல் நாளை ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட தொகை முதல் பரிசாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிக வாடிக்கையாளர்களை இந்த குலுக்கல் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேரம் நீட்டிப்பு
நாளைய குலுக்கலில், வழக்கமான நேரமான மாலை 6 மணிக்கு பதிலாக, இரவு 9 மணி வரை வாடிக்கையாளர்கள் பந்தயம் கட்டலாம்.
அதற்கான முடிவுகள் அன்று இரவு 9:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசியாக நடந்த TOTO ஜாக்பாட்
கடைசியாக கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நடந்த டோட்டோ டிராவில் ஜாக்பாட் தொகை S$10 மில்லியனைத் தாண்டியது.
அதன் முதல் பரிசான S$12.9 மில்லியன் தொகை இரண்டு வெற்றியாளர்களுக்கு சமமாக பிரித்து கொடுக்கப்பட்டது.
TOTO விளையாட்டு விதிகள்
நாளை நடைபெறும் குலுக்கலில் எந்த வெற்றியாளரும் குரூப் 1 முதல் பரிசை வெல்லவில்லை என்றால், டோட்டோ விளையாட்டு விதிகளின்படி, பரிசுத் தொகை குரூப் 2 வெற்றியாளர்களிடையே பிரித்து கொடுக்கப்படும்.
TOTO தொடர்பான கூடுதல் செய்திகள்
புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

